டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்ததாகக் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
டிடிசிஏ துணைத்தலைவர் சேத்தன் சவுகான் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
டிடிசிஏவில் ஊழல் நடந்ததாக சிலர் புகார் கூறி உள்ளனர். இது முக்கியமான பிரச்சினை என்ப தால் புகார் கூற முன்வருவோரை வரவேற்கிறோம். அவர் களது பெயர் ரகசியமாக வைக்கப் படும். தவறு நடந்திருந்தால் சம்பந் தப்பட்டவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும். எவ்வித ஆதாரமும் இன்றி இத்தகைய குற்றச்சாட்டை ஏன் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்காக பணம் வாங்கிய தாகவும் அவர்களது உறவுப் பெண் களை உறவுக்கு அழைத்ததாகவும் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஷிகர் தவன் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் எப்படி சர்வதேச அணியில் இடம் பிடித்திருக்க முடியும்?
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய கேஜ்ரிவால், கீர்த்தி ஆசாத் மீது டிடிசிஏ அவதூறு வழக்கு தொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறும்போது, “டிடிசிஏ-வில் நிதி முறைகேடு மட்டுமல்லாமல் பாலியல் ரீதியி லான தொந்தரவும் கொடுக்கப்பட் டுள்ளது. குறிப்பாக, ஒருவரை கிரிக்கெட் குழுவில் தேர்வு செய் வதற்கு பிரதிபலனாக அவரது தாயை உறவுக்கு அழைத்துள்ள னர். இந்தத் தகவலை அந்த இளைஞரின் தந்தையே (மூத்த பத்திரிகையாளர்) தெரிவித்தார்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆதார கடிதம் வெளியீடு
டிடிசிஏ தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது, ஒரு வங்கி யின் கிரிக்கெட் கிளப் தொடர் புடைய விசாரணையை மூடுமாறு காவல் துறைக்கு அழுத்தம் கொடுத் ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இதுதொடர்பாக, அருண் ஜேட்லி எழுதியதாகக் கூறி 2 கடிதங் களை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.