இந்தியா

மிக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது யாஸ் புயல்: மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

யாஸ் புயல் மிக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இருப்பதால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுததுறையின் தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளதாவது:

ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடந்த யாஸ் புயல் வலுவிழந்து மத்திய ஜார்கண்ட் பகுதியில் நேற்று காற்றழுத்தமாக மையம் கொண்டிருந்தது.

அது வடமேற்கு நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பிஹார் மற்றும் அதையொட்டியுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மையம் கொண்டு இருந்தது. பின்னர் இது வடமேற்கு நோக்கி நகர்ந்து மிக குறைந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது.

இதன் காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கிழக்கு உத்தரப் பிரதேசத்திலும் இன்று ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT