பி.கே.வாரியர் 
இந்தியா

கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை அறங்காவலர் வாரியரின் 100-வது பிறந்த நாள்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயுர்வேத நிகழ்ச்சிகள்; லோகோ வெளியீடு

என்.சுவாமிநாதன்

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலைக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர். பல்வேறு வகையான உடல் உபாதைகளுக்கும் இங்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த வைத்தியசாலையின் தூணாகக் கருதப்படும் பி.கே.வாரியரின் நூறாவது பிறந்தநாள் வரும்8-ம் தேதி வருகிறது. அதனைச் சிறப்பிக்கும் வகையில் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் சார்பில் தொடர்ச்சியாக ஆயுர்வேத நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டு விழாவுக்கான ‘லோகோ' நேற்று வெளியிடப்பட்டது.

கோட்டக்கல் ஆர்யவைத்திய சாலையை நிறுவிய பி.எஸ்.வாரியர்1944-ல் காலமானார். அவருக்குப்பின் அவரது மருமகன்பி.எம்.வாரியர் தலைமை மருத்துவராகவும், முதல் அறங்காவல ராகவும் பொறுப்பேற்றார். 1953-ல்விமான விபத்தில் அவரும் இறந்துவிட அவரது சகோதரர் பி.கே.வாரியர் அறங்காவலர் ஆனார். பன்னியம்பள்ளி கிருஷ்ண வாரியர் என்பதன் சுருக்கமே பி.கே.வாரியர். அவர் பொறுப்பேற்ற பின்னரே கோட்டக்கல் உலக அளவில் பிரசித்தி பெற்றது. பாரம்பர்ய மருத்துவத்தை உலக அரங்கில் கொண்டு சேர்த்ததற்காக மத்திய அரசால் பத்ம, பத்ம பூஷண் விருதுகளையும் பெற்றிருக்கும் பி.கே.வாரியர் உலகின் பல்வேறுநாடுகளில் நடந்த கருத்தரங்குகளிலும் ஆயுர்வேத மருத்துவமுறை பற்றி பேசியிருக்கிறார். ‘பாடமுத்ரகள்’ என்ற தலைப்பில் இவரது பேச்சுக்கள் புத்தகமாகி பெரும்வரவேற்பையும் பெற்றன. பி.கே.வாரியர், பிரபல ஆயுர்வேத மருத்துவர் குட்டாஞ்சேரி வாசுதேவன்ஆசானிடம் சீடராக இருந்தவர். கோட்டக்கல் ஆயுர்வேத வைத்தியசாலை அதன் பல்வேறு கிளைகளின் மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தின் தகவல் பெட்டகமாக நம்மிடையே வாழ்ந்து வரும் பி.கே.வாரியரின் நூறாவது பிறந்தநாள் வரும் ஜூன் 8-ம் தேதிவருகிறது. கடந்த 67 ஆண்டுகளாக கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலராக இருந்துவரும் பி.கே.வாரியர் ஆயுர்வேத மருத்துவத் துறையில் செய்த சாதனைகள், அவரது பங்களிப்பை அடுத்ததலைமுறயினர் தெரிந்துகொள்ளும் வகையில் ‘தச பூர்ணிமா’ என்னும் நிகழ்வை கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை முன் னெடுக்கிறது.

அதேநேரம் கரோனா காலம், பொதுமுடக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு உடனடியாக கருத்தரங்குகளை நடத்துவதில் சிக்கல் இருப்பதால் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை கரோனாகால பொதுமுடக்கம் முடிவுக்குவந்தபின்பு வெகுவிமரிசையாக முன்னெடுக்க முடிவெடுத் துள்ளனர்.

இதில் ஆயுர்வேத கல்வி, இலக்கியங்களில் ஆயுர்வேதம், மருத்துவத்துறையில் ஆயுர்வேதம் செய்த சாதனைகள் இவற்றோடு பி.கே.வாரியரின் ஆயுர்வேத பங்களிப்பையும் ஆவணப்படுத்தும் முனைப்பில் இருக்கிறது கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை. ‘சத பூர்ணிமா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக, லோகோ வெளியீட்டுவிழா நேற்று கோட்டக்கலில் நடைபெற்றது. இதில் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் அறங்காவலரும், குடும்பத்தின் மூத்த உறுப்பினருமான பி.ராகவா வாரியர், மூத்த பெண் உறுப்பினர் சரஸ்வதி வரஸ்யர் ஆகியோர் லோகோவை வெளியிட்டனர்.

SCROLL FOR NEXT