இந்தியா

உ.பி. அரசு மருத்துவமனையில் முதல் டோஸ் கோவிஷீல்டு; 2-ம் டோஸில் கோவாக்சின்

செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ஏப்ரல் முதல் வாரத்தில் 20 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது. அவர்கள் 2-ம் டோஸ் போட மே 14-ம் தேதி வந்த போது அவர்களுக்கு கோவி ஷீல்டுக்கு பதிலாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்ரி கூறும்போது, “இது முற்றிலும் அஜாக்கிராதையால் நடந்த சம்பவம். இதுதொடர் பாக விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது. குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசியை மாற்றிப் போட்டுக் கொண்ட கிராம மக்களை சந்தித்து பேசியுள்ளோம். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

இளைஞரின் பயம்

இதுகுறித்து தடுப்பூசி போட்டுக் கொண்ட ராம் சூரத் என்பவர் பேசும்போது, “மாற்றி மாற்றி தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் நான் பயத்தில் உள்ளேன். என்ன பக்க விளைவுகள் ஏற்படுமோ தெரியவில்லை’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT