வியாபம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மத்தியப் பிரதேச தொழில்முறை கல்வி தேர்வு வாரியம் (வியாபம்) சார்பில் அம்மாநிலத்தில் காலியாக வுள்ள அரசு பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மாநில ஆளுநர், அமைச்சர்கள், அரசு உயரதிகாரி கள் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
முதற்கட்டமாக சிறப்பு அதிரடிப் படை மேற்கொண்ட விசாரணையில் வனத்துறை ஊழியர்கள், உணவு ஆய்வாளர்கள் ஆகிய பணியிடங் களை நிரப்பியதில் நடந்த ஊழல் கள் உட்பட மேலும் 7 வழக்குகளில் முன்னாள் அமைச்சர் லஷ்மிக காந்த் சர்மாவுக்கு தொடர்பு இருப் பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2014, ஜூன் 16-ம் தேதி கைதான சர்மா கடந்த ஓராண்டாக சிறைவாசம் அனுபவித்து வரு கிறார்.
இவ்வழக்கில் ஜாமீன் வழங்க கோரி சர்மா தரப்பில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவ ருக்கு ஜாமீன் வழங்க ஒப்புதல் தெரிவித்தது. அதன் அடிப்படையில் போபால் மாவட்ட நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை அவரை ஜாமீனில் விடு விக்க உத்தரவிட்டது.