காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி. ஆனால், தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மெதுவாக நடக்கின்றன. மக்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை. இதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் 18 முதல் 45 வயது வரையிலான மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்தி உள்ளன. இந்நிலையில், மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ