பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்க பாரீஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டார்.
பருவநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐ.நா. சபை சார்பில் நடக்கும் சர்வதேச மாநாடு நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கியது. இதில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அங்கு கூடினர். மாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்க ஞாயிறு அன்று பாரீஸ் சென்றிருந்து பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டார்.
இதனை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான் அதிபர் அபே, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூ, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்தார். நவாஸ் ஷெரீபுடனான மோடியின் சந்திப்பு இயல்பான அணுகுமுறையாக அமைந்தது. இரு நாட்டு தலைவர்களும் குறைந்த நேரமே பேச்சுவார்த்தை நடத்தினர்.