இந்தியா

எதிர்க்கட்சிகளிடமிருந்து சாதகமான சமிக்ஞை: இனி நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும் - மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை

பிடிஐ

மாநிலங்களவையில் சில முக்கிய மான மசோதாக்களை நிறை வேற்றுவது தொடர்பாக எதிர்க் கட்சிகளிடமிருந்து அரசுக்கு சாதக மான சமிக்ஞைகள் கிடைத் துள்ளன. வரும் திங்கள்கிழமை (டிச.21) முதல் நாடாளுமன்றம் சுமுகமாக செயல்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

திங்கள்கிழமை முதல் நாடாளு மன்றம் முறையாக செயல்படும் என நம்புகிறேன். தற்போதைய நிலையில் மக்களவை நன்றாக செயல்படுகிறது. மாநிலங்களவை யும் நன்றாக செயல்படும்.

எதிர்க்கட்சிகளிடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைத் துள்ளன. சில மசோதாக்கள் நிறைவேறுவதற்கு ஆதர வளிப்பதாக காங்கிரஸும் தெரிவித்திருக்கிறது. மசோதாக் களை நிறைவேற்றுவதில் நாங்கள் சிரத்தை கொண்டிருக் கிறோம்.

ஜிஎஸ்டி மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி கள் ஆதரவளித்தால் அவற்றால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். இம்மசோதாக்களில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், நாடாளுமன்றத்தில் விவாதியுங் கள். ஆனால், நாடாளுமன்றத்தை முடக்காதீர்கள்.

எதிர்க்கட்சிகளுக்கு குறிப் பாக காங்கிரஸுக்கு வேண்டு கோள் விடுக்கிறோம். இந்த மசோதாக்கள் உங்களின் ஆட்சிக் காலத்தில் பரிந்துரைக் கப்பட்டவை. இவற்றுக்கு ஆதரவு தெரிவியுங்கள். எஞ்சியிருக்கும் மூன்று நாட்களில் நாம் ஏராளமானவற்றைச் செய்து முடிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT