ஹரியாணா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் ஓட்டுநர் ஒருவர் உட்பட 2 பேர் பலியானதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லியிலிருந்து 80கிமீ தொலைவில் பல்வால் மாவட்டத்தில் உள்ள பகோலா என்ற கிராமம் அருகே மின்சார ரயில் ஒன்று அதே இருப்புப் பாதையில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயில் மீது பின்பக்கமாகச் சென்று பயங்கரமாக மோதியது.
கடும் பனிமூட்டமே இந்த விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளை ரயில்வே மற்றும் மாவட்ட அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பல்வால் மற்றும் பரிதாபாத் மருத்துவமனைகளில் விரைவு கதியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.