இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றார் சல்மான்

பிடிஐ

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், தன் நண்ப ரும் பாடகருமான கமால் கானை சாட்சியாக விசாரிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் இருந்து சல்மான் கான் திரும்பப் பெற்றுள்ளார்.

விபத்து ஏற்படுத்திய காரில் சல்மான் கானுடன் அவரது பாதுகாவலர் ரவீந்திர சிங் பாட்டில், கமால் கான், சல்மானின் டிரைவர் ஆகியோர் உடனிருந்தனர்.

விசாரணையில் மும்பை காவல் துறையிடம் அளித்த வாக்குமூலத் தில் சல்மான் கான்தான் காரை ஓட்டியதாக கமால் கான் தெரிவித் திருந்தார். இந்நிலையில், பாது காவலர் ரவீந்திர சிங் இறந்ததை அடுத்து, கமால் கானின் சாட்சி முக்கியம் என்பதால், அவரை விசாரிக்க வேண்டும் என சல்மான் தரப்பு வாதிட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத் திலும் மனு தாக்கல் செய்தது. ஆனால் மும்பை உயர் நீதிமன்றம் சல்மானை வழக்கிலிருந்து விடுவித்துள்ளதால், உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை சல்மான் நேற்று திரும்பப் பெற்றார்.

SCROLL FOR NEXT