இந்திய மக்களைப் புறக்கணித்துவிட்டு கரோனா தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று சீரம் இந்தியா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பரவலின் 2வது அலை தீவிரமாகியுள்ளது. இதனால் நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் முன்னுரிமை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சீரம் இந்தியா நிறுவனத் தலைவர் ஆதார் பூனாவாலா. கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புக் கொண்டதன்பேரில் சில நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டன. ஆனால் இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகக் கருதக்கூடாது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் இந்தியா போன்ற அதிகமக்கள் தொகை கொண்ட நாட்டில்அனைவருக்கும் தடுப்பூசி போடும்நடவடிக்கையானது ஓரிரு மாதங்களில் முடியும் செயலும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.