இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 4,22,436 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: ஒருநாள் பாதிப்பு 2,63,533

ஏஎன்ஐ

இந்தியாவில் ஒரே நாளில் 4,22,436 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ள ஆறுதல் செய்தி வெளியாகியிருக்கிறது.

அதேபோல் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநில கரோனா நிலவரத்தின் அடிப்படையில் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கின்றன.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

இதன்படி,

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,63,533 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 4,22,436 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,52,28,996
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,63,533
இதுவரை குணமடைந்தோர்: 2,15,96,512
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 4,22,436
கரோனா உயிரிழப்புகள்: 2,78,719
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 33,53,765
இதுவரை 18,44,53,149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT