இந்தியா

பசுவதை தடை சட்டத்தை இயற்றக் கோரும் மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

பசுவதை தடை சட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு எனக் கூறி, அது தொடர்பான மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சாத் பவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பசுவதையை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும், பசுவதைக் கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இம்மனு, தலைமை நீதிபதி ரோஹிணி, நீதிபதி ராஜீவ் சஹாய் என்டலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இவ் விவகாரம் தொடர்பாக போதுமான சட்டங்கள் தேவையான நேரத்தில் அரசுகளால் இயற்றப்பட்டுள்ளன. இப்பிரச்சினை நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அதிகாரப்பகிர்வு கோட் பாட்டில் எல்லை மீற முடியாது.

இம்மனு விசாரணைக்கு தகுதி யற்றது. உச்ச நீதிமன்றம்கூட தனது உத்தரவில், பசுவதை தொடர்பாக எந்தவொரு வழிகாட்டுதலையும், வழங்க முடியாது என தெளிவு படுத்தியுள்ளது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT