கோப்புப்படம் 
இந்தியா

தடுப்பூசி வாங்கவும், ஆக்சிஜன் உற்பத்தி திட்டம் அமைக்கவும் பிஎம் கேர்ஸ் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி வாங்கவும், நாடுமுழுவதும் 738 மாவட்ட மருத்துமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கவும் பிஎம் கேர்ஸ் நிதியைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை வழக்கறிஞர் விபால்வ் சர்மா தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது

“ மத்தியஅரசு பிஎம் கேர்ஸ் நிதியை வெளியே எடுத்து மக்களுக்காகச் செலவிட வேண்டும். குறிப்பாக சாமானிய மக்களுக்கு அவசரமாக மருத்துவ வசதிக்கும், ஆக்சிஜன் தேவைக்கும் பிஎம் கேர்ஸ் நிதியைப் பயன்படுத்த வேண்டும்.

சமானிய மக்கள் எளிதாக அணுகக்கூடியது அரசு மருத்துவமனைகள்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அரசு மருத்துவனைகளில் கரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ஆக்சிஜன் கருவிகள் தேவைப்படுகிறது. நாட்டில் உள்ள 738 மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி திட்டம் அமைக்கவும், தடு்பபூசி கொள்முதலுக்கும் பிஎம் கேர்ஸ் நிதியைபைப் பயன்படுத்த வேண்டும்.

கடந்த மாதம் 24ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவரீதியான உபகரணங்கள், ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவைப்படும் சாதனங்களுக்கு இறக்குமதி வரி விலக்கு 3 மாதங்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தது.

ஆனால் நீண்ட காலத்துக்கு ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான கருவிகள் இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும். ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட மிகப்பெரிய மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்கும். ஆதலால், 3 மாதத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி திட்டங்களில் போதுமான அளவு ஆக்சிஜன் சப்ளையை வழங்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்.

முக்கிய நகரங்களில் மின் தகண மேடை, இறுதிச்சடங்கு செய்யும் எரியூட்டும் இடம்ஆகியவற்றில் மின்மயமாக்க வேண்டும், ஏற்கெனவே இருப்பதையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களையும் ஒருங்கணைத்து தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT