திருப்பதி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு, செம்மர கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். கடத்தப்படவிருந்த ரூ. 3 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் நள்ளிரவு திருப்பதி அருகே உள்ள லட்சுமிபுரம் ஏரி அருகே அதிரடி படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட செம்மர கடத்தல் கூலி தொழிலாளர்கள் போலீஸார் மீது ரயில் தண்டவாளம் அருகே இருந்த கற்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீஸார் 3 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் செம்மரங்களை அங் கேயே போட்டுவிட்டு சேஷாசலம் வனப்பகுதிக்குள் கடத்தல் கும்பல் தப்பியது.
சம்பவ இடத்தில் இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 103 செம் மரங்களை போலீஸார் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.