மிசோரம் மாநிலத்தின் மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் ஆர்.லால்ஸிர்லியனா (71). இவரது மகனுக்கு கடந்த 8-ம் தேதி கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 11-ம் தேதி அமைச்சர் லால்ஸிர்லியனா மற்றும் அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மூவரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கடந்த 12-ம் தேதி அமைச்சருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே மிசோரம் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்ட தாகவும், அவரது ஆக்சிஜன் அளவு இயல்பாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களது குடும்பத்தினர் இரண்டு நாட்கள் மினி ஐசியூவில் வைக்கப்பட்டிருந்த சூழலில், இப்போது நலமாக உள்ளனர்.
இந்நிலையில். தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் தரைப் பகுதியை அமைச்சர் லால்ஸிர்லியனா சுத்தம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி அமைச்சர் கூறுகையில், ‘‘எனது அறையை சுத்தம் செய்து தருமாறு தூய்மை பணியாளருக்கு அறிவுறுத்தினேன். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வர வில்லை. எனவே நானே சுத்தம் செய்துவிட்டேன். இவ்வாறு தரையைக் கூட்டுவதோ, சுத்தம் செய்வதோ எனக்கு புதிது அல்ல. ஏற்கெனவே வீடு உள்ளிட்ட இடங்களை நான் சுத்தம் செய்திருக் கிறேன். இப்படி செய்வதன் மூலம் மருத்துவர்களையோ அல்லது செவிலியர்களையோ தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விரும்ப வில்லை. அனைவருக்கும் நான் முன்னுதாரணமாக விளங்கவே விரும்புகிறேன்’’ என்று தெரிவித் தார்.