இந்தியா

அரபிக் கடலில் டவ்-தே தீவிரப் புயல்: குஜராத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாகியுள்ளதை முன்னிட்டு, குஜராத் மற்றும் டையு கடலோர பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளதாவது:

கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு நோக்கு மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 8. 30 மணி நிலவரப்படி, பன்ஜிம் கோவாவுக்கு தென்மேற்கே 120 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது குஜராத்தில் போர்பந்தர் - மகுவா இடையே வரும் 18-ம் தேதி காலை கரையை கடக்கும் எனத் தெரிகிறது.

இதனால் இன்று முதல் 18ம் தேதி வரை காற்று மணிக்கு 130 கி.மீ வேகம் முதல் 160 கி.மீ வேகம் வரை படிப்படியாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குஜராத் மற்றும் டையூ கடலோர பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிரா, கட்ச், டையு, குஜராத்தின் தென் பகுதிகள் சில வற்றில் நாளை கனமழையும், நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் தீவிர கன மழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளது.

SCROLL FOR NEXT