இந்தியா

வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து தமிழக அரசு மீது பாமக புகார்: மக்களவையில் அதிமுக அமளி

பிடிஐ

தமிழகத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் முறையாக நடை பெறவில்லை என மக்களவையில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது இப்பிரச்சி னையை எழுப்பிய அன்புமணி, “சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பாதி இயற்கையாலும், பாதி மனித தவறாலும் ஏற்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் உட்பட பல வெளிப்படையான பிரச்சினைகள் வெளிப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை பிரதமர் ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை நிவாரணப் பணி களில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ராணுவம், மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே சிறிய ஒத்துழைப்பு கூட இல்லை” என்றார்.

உடனடியாக எழுந்த அதிமுக எம்.பி.க்கள் அவையின் மையத் துக்கு வந்து அமளியில் ஈடுபட் டனர். அப்போது அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், பாமக உறுப்பினரின் குற்றச்சாட்டுகள் குறித்து கவனிப்பதாக உறுதி யளித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி. பி.ஆர். சுந்தரம், முதல்வர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் அற்புதமாக செயலாற்றியதாக குறிப்பிட்டார். மக்களுக்கு தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளதாக ஜெய லலிதா வெளியிட்ட அறிக்கையை யும் அவர் வாசித்தார். மேலும், சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க மத்திய அரசு ரூ.8,481 கோடி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

SCROLL FOR NEXT