இந்தியா

மும்பையில் ஏர் இந்தியா விமான என்ஜினில் சிக்கி ஊழியர் பலி

பிடிஐ

மும்பையில் ஏர் இந்தியா விமான என்ஜினை ஊழியர் பராமரித்துக் கொண்டிருந்த வேளையில் விமானம் இயக்கப்பட்டதால் அதில் சிக்கிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏ-619 விமானம் நேற்று இரவு தயார் நிலையில் இருந்தது. விமான தொழில்நுட்ப ஊழியர் என்ஜின் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது துணை விமானி என்ஜினை இயக்கியதால் இன்ஜின் ஊழியர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விமானம் புறப்படும்போது அதனை பின்னுக்குத் தள்ளி இயக்க முயன்றபோது, சிக்னலை தவறான வகையில் புரிந்துகொண்டு என்ஜினை இயக்கியதால் அந்த சமயத்தில் என்ஜினை சரிப்பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் உள்ளே இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதாக ஏர் இந்தியா நிறுவனத் தலைவர் அஸ்வினி லோஹானி தெரிவித்தார்.

ஊழியர் பலியான சம்பவம் வருத்தம் அளிப்பதாக தெரிவித்த லோஹானி இந்த விபத்துக் குறித்து துறை ரீதியிலான விசாரணை நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT