இந்தியா

இ-சஞ்சீவனி திட்டத்தில் 50 லட்சம் மருத்துவ ஆலோசனைகள்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டத்தில் இதுவரை 50 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள தாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செல்பேசி வழியாக மருத்துவ ஆலோ சனைகள் வழங்கும் இ-சஞ்சீவனி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் புற நோயாளிகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோ சனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் குறித்த ஓராண்டு அறிக்கையை மத்திய சுகாதார அமைச் சகம் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஓராண்டில் 50 லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் அறிக்கையில் கூறியுள்ளதாவது: 31 மாநி லங்கள், யூனியன் பிரதேசங்களிலும் இந்த இ-சஞ்சீவனி திட்டம் செயல்பாட் டில் உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 40 ஆயிரம் நோயாளிகள் இதன் மூலம் மருத்துவ ஆலோசனைகளைப் பெறு கின்றனர். வீட்டிலிருந்தபடியே இல் லாத வகையில் மருத்துவ ஆலோ சனைகளை இலவசமாக இத்திட்டத்தின் மூலம் பெறுவது மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டம் மருத்துவர்களுக் கிடையிலான ஆலோசனை மற்றும் மருத்துவர், நோயாளி இடையிலான ஆலோசனை என இரண்டு வகை களில் செயல்படுத்தப்படுகிறது. மருத்து வர்களுக்கிடையிலான ஆலோசனைப் பகிர்வு திட்டம் 2019 நவம்பரிலிருந்து செயல்பட்டுவருகிறது. நாடு முழுவதும் 18,000 மருத்துவ மையங்கள் மற்றும் 1,500 ஒருங்கிணைந்த மையங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 2022 டிசம்பரில் இத்திட்டம் 1,55,000 மருத்துவ மையங்களில் செயல்படும் வகையில் விரிவுபடுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 20 லட்சம் நோயாளிகள் பலன் அடைந்துள்ளனர்.

புற நோயாளிகளுக்கான ஆலோ சனை திட்டத்தில் 350 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 30 லட்சம் நோயாளிகள் இதன் மூலம் ஆலோசனை பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தில் 10 லட்சம் ஆலோசனைகள் வழங்கி தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கரோனா நெருக்கடி காலத்தில் அதிக மருத்துவ ஆலோசனைகள், மருத் துவ சிகிச்சைகள் தேவை இருப்பதால் மருத்துவம் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களை ஈடுபடுத்தவும் மாநிலங் கள் திட்டமிட்டுள்ளன.

SCROLL FOR NEXT