மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் மார்க்கஸ் ரேனி. இவரது மனைவி டாக்டர் ரெய்னா. இருவரும் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து டாக்டர் மார்க்கஸ் ரேனி கூறும்போது, “கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் இந்த மருந்துகளை சேகரிக்க ஆரம்பித்தோம். தற்போது 20 கிலோ எடையுள்ள மருந்துகள் எங்களிடம் கிடைத்துள்ளன. தேவைப்படும் நோயாளிகளுக்கு இதை தற்போது வழங்கி வருகிறோம். அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களுக்கும் இதை வழங்கி வருகிறோம்.
மருந்து வாங்க காசில்லாமல் கஷ்டப்படும் நோயாளிகளைத் தேடிச் சென்று இதை வழங்குகிறோம். இவை அனைத்தும் விலைஉயர்ந்தவை.
எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களை சேர்த்து ஒரு குழுவை உருவாக்கினோம். அதன்மூலம் தற்போது மருந்துகளை திரட்டி வருகிறோம். தற்போது இந்த மருந்துகளை ஊரகப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வழங்கி வருகிறோம்.
தற்போது 100 அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களிடமிருந்து எங்களுக்கு பயன்படுத்தாத மருந்துகள் வருகின்றன” என்றார்.
இவர்களின் சேவையைப் பாராட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து இவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.