கோப்புப்படம் 
இந்தியா

கூடுதலாக இவர்மெக்டின், பேபிபுளூ மாத்திரை உற்பத்தி

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இவர்மெக்டின், ஃபேபிபுளூ மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இவை எதிர்ப்பு சக்தியை தரும் மாத்திரைகளாக உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இவர்மெக்டின் மாத்திரையின் தேவை மாதத்துக்கு 7 கோடி யாக உள்ளது. தற்போது மாதத்துக்கு 30 கோடி மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்பார்த்த அளவை விட உபரி அளவாக இந்த மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தினந்தோறும் 5 நாட்களுக்கு 12 மி.கி இவர்மெக்டின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த நோயாளிகளுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

அதைப் போலவே ஃபேபிபுளூ மாத்திரைகள் இந்தியாவில் மாதத்துக்கு 16 கோடி அளவில் தேவைப்படுகிறது. ஆனால் இதன் உற்பத்தியோ நாட்டில் மாதத்துக்கு 40 கோடியாக உள்ளது. இந்த மாத்திரைகள் மூலம் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறைந்த அளவிலான கரோனா தொற்று உள்ளவர்களுக்கும், வீட்டுத் தனிமையில் உள்ளவர் களுக்கும் பேபிபுளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT