இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,48,421 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,48,421 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,33,40,938 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,04,099 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 1,93,82,642 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கரோனாவிலிருந்து 3,55,338 பேர் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4205 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,54,197 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 17,52,35,991 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 30,75,83,991 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 19,83,804 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.