இந்தியா

நாடாளுமன்ற தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி

பிடிஐ

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றம் மீது பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் டெல்லி போலீஸார் 5 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத் தின் 14-ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர் கள் நேற்று எழுந்து நின்று தாக்குத லில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தனது இரங்கல் குறிப்பில் கூறும்போது, “பயங்கர வாதிகளின் கொடூர திட்டங்களை முறியடிக்கவும் தாய்நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கவும் இந்நாளில் நாம் உறுதியேற்போம்” என்றார்.

மாநிலங்களவையிலும் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி இரங்கல் தெரிவித்து பேசினார்.

SCROLL FOR NEXT