மிகக் குறைந்த விலையில் 3 வகையான வென்டிலேட்டர்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத் துள்ளது.
கரோனா தொற்று அதிகரித் துள்ள நிலையில், பல மாநிலங் களில் வென்டிலேட்டர், ஆக்சிஜன் கான்சன்ரேட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரோ நிறுவ னம் குறைந்த செலவில் 3 வகை வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளது. இதேபோல குறைந்தவிலை ஆக்சிஜன் கான்சன்ரேட்டரையும் தயாரித்துள்ளது.
இதுகுறித்து திருவனந்த புரத்தில் செயல்படும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குநர் சோம்நாத் கூறியதாவது:
பிராணா, வாயு, ஸ்வாஸ்தா ஆகிய 3 வகையான வென்டிலேட் டர்களை வடிவமைத்துள்ளோம். ஒரு வென்டிலேட்டர் தற்போது ரூ.5 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இஸ்ரோவின் வென்டிலேட்டரை ரூ.1 லட்சத்தில் வாங்க முடியும். இவை சர்வதேச தரத்தில் உரு
வாக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
வென்டிலேட்டர் தவிர குறைந்த விலை ஆக்சிஜன் கான்சன்ரேட்டரையும் வடி வமைத்துள்ளோம். அடுத்த ஒரு மாதத்துக்குள் வர்த்தகரீதியாக புதிய வென்டிலேட்டர், ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் உற்பத்தி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.