பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட அரசின் அனைத்து முக்கிய சேவைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஒரு பக்கம் கொண்டதாக விரைவில் எளிமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 25 ஆண்டுதோறும் ‘சிறந்த நிர்வாக தினம்’ ஆக கடைபிடிக் கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 2-வது சிறந்த நிர்வாக தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதி யத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஓய்வூதியதாரர் களுக்கான ஒரு பக்க விண்ணப்ப படிவத்தை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள் ளிட்ட பல்வேறு அரசு சேவை களைப் பெறுவதற்காக பல பக்கங் களைக் கொண்ட நீண்ட நெடிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. பயனாளிகளின் வசதிக்காக இந்த விண்ணப்ப படிவங்களை அடுத்த ஓராண்டுக் குள் ஒரு பக்கம் கொண்டதாக எளி மைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மாநில அரசு களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படும். இதன் ஒரு பகுதியாக, ஒரே பக்கத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதிய தாரர்களுக்கான விண்ணப்பம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பணியாளர் நலத் துறை செயலாளர் சஞ்சய் கோத்தாரி கூறும்போது, “அனைத்து அரசு சேவைகளுடனும் ஆதார் எண் இணைக்கப்படும். இதன்மூலம் பய னாளிகள் அனைத்து விவரங்களை யும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் படிவங்கள் ஒரு பக்கத்தில் எளிமையாக இருக்கும்” என்றார்.