இந்தியா

அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கைதிகள், யாசகர்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தடுப்பூசி போடுவ தற்கு அடையாள அட்டை ஒரு தடையாக இருந்து விடக்கூடாது.எனவே சிறைக்கைதிகள், யாசகர்கள் உள்ளிட்டோருக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் அடையாள அட்டைகள் இல்லா விட்டாலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறைக் கைதிகள், சாதுக்கள், சன்யாசிகள், மனநல காப்பகங்களில் உள்ளவர்கள், முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள், யாசகர்கள், மறுவாழ்வு மையங்களில் தங்கி இருப்பவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இவர்களிடம் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, என்பிஆர் ஸ்மார்ட் கார்ட், பென்ஷன் ஆவணங்கள் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி திஹார் சிறையின் இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் கூறும்போது, “திஹார் சிறையில் கரோனா தொற்றால்் 5 பேர் இறந்துவிட்டனர். கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ளது. எனவே தற்போது சிறைக் கைதிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT