சர்வதேச குற்றவாளியாக அறியப்பட்டவர் நிழல் உலக தாதா சோட்டா ராஜன். இந்தோ னேசியாவின் பாலி தீவில் 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து சிபிஐயால் டெல்லி கொண்டு வரப்பட்டவர் திஹார் சிறை யில் அடைக்கப்பட்டார். இங்கு சோட்டா ராஜனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் ஏப்ரல் 26-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சோட்டா ராஜன் நேற்று இறந்து விட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து தகவல்கள் வெளியாயின. ஆனால், இது தவறான செய்தி என டெல்லி போலீஸார் மறுத்துள்ளனர்.
டெல்லி தென்மேற்கு பகுதியின் ஆணையர் பிந்து குமார்சிங், எய்ம்ஸ் மருத்துவமனையில், சோட்டா ராஜனுக்கு சிகிச்சை தொடர்வதாகவும், அவர் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதே தகவலை எய்ம்ஸின் டிரோமா சென்டர் பிரிவின் தலைமை மருத்துவர் ராஜேஷ் மல்ஹோத்ராவும் உறுதிப்படுத்தி உள்ளார்.
திஹார் சிறையில் சோட்டா ராஜனுடன் பிஹாரின் கிரிமினல் அரசியல்வாதியான சஹாபுதீனும் அடைக்கப்பட்டிருந்தார். ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மிகவும் நெருக்கமான சஹாபுத்தீன், முன்னாள் எம்.பியுமாவார்.
இந்த இருவரது சிறை அறையில் பாகிஸ்தானின் தீவிரவாதி ஒருவர் புதிதாக அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு இருந்த கரோனா தொற்றால் சஹாபுதீனுக்கும், ராஜனுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில், சஹாபுதீன் கடந்தமே-ம் தேதி இறந்து விட, ராஜன்எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் 2011-ல் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜோதிர்மாதேயின் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 2018-ல் மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.