கரோனா பரவலை எதிர்கொள்ள மேலும் 1.5 லட்சம் ஸ்புட்னிக் விதடுப்பூசிகளை ரஷ்யா அனுப்பவிருக்கிறது.
இந்தியாவில் கரோனா பரவலின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. பல நாடுகள் இந்தியாவுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவில் உற்பத்திசெய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாடு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே முதல் தொகுப்பாக 1,50,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் மே 1-ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பியது. தற்போது இரண்டாம் தொகுப்பாக 1,50,000தடுப்பூசிகளை அனுப்ப உள்ளது.அடுத்த சில தினங்களில் இது இந்தியா வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே மாத இறுதியில்டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் 3 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் 5 மில்லியன், ஜூலை மாதத்தில் 10 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் 4 ஆக்சிஜன் உற்பத்தி டிரக்குகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றும் ரஷ்யாவின்இந்தியாவுக்கான தூதரக அதிகாரிகூறியுள்ளார். தொற்று பாதிப்புஅதிகரித்து வரும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி தேவையை சமாளிக்க ரஷ்யா அனுப்பும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் உதவும் எனக் கூறப்படுகிறது.