இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் இன்று ஆஜர் - டெல்லி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

பிடிஐ

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகின்றனர். இதற்காக பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேஷனல் ஹெரால்டு பத்திரி கையை கையகப்படுத்தி அதன் சொத்துகளை முறைகேடாக பயன் படுத்தியதாக சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் சோனியாவும் ராகுலும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள் ளார். இருவரும் ஜாமீன் கோராத பட்சத்தில் நீதிமன்ற காவலில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. மேலும் நீதிமன்ற வளாகத் தில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விசாரணை நடைபெறும் நீதிமன்ற வளாகம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படும். வளாகத்தில் உள்ள கடைகள் மூடப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT