இந்தியா

புதிய வகை உருமாறிய கரோனா பற்றி பீதி வேண்டாம்: நிபுணர்கள் தகவல்

செய்திப்பிரிவு

புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் என்440கே ஆபத்தானது. ஏற்கெனவே உள்ள கரோனா வைரஸை விட இந்த உருமாறிய கரோனா வீரியம் மிக்கது. மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில், உயிரணுமற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் (சிசிஎம்பி) ஆலோசகர் ராகேஷ் மிஸ்ரா கூறியதாவது:

என்440கே புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் ஏற்கெனவே உள்ள கரோனா வைரஸை விட அதிகம் வீரியம் மிக்கதுதான். ஆனாலும் மக்கள் அச்சப்பட வேண்டியது இல்லை. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 20-ல் இருந்து 30 சதவீத அளவுக்கு உருமாறிய என்440கே கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இவை வரும் வாரங்களில் வீரியம் குறைந்து மறைந்துவிடும். எனவே, மக்கள் இந்த புதிய வகை கரோனா தொற்று குறித்து பீதியடையத் தேவையில்லை. அதேசமயம், மக்கள் கரோனா விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உருமாறிய கரோனா வகைகள், அதற்கான தீர்வுகள் குறித்தும் நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் மக்கள் கரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஆந்திர சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT