பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இ.பி.எஃப்.ஓ) நிதி ஆலோசகர் சஞ்சய் குமார் மற்றும் சிலர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனையடுத்து செவ்வாயன்று சஞ்சய் குமாரின் அலுவலகம் மற்றும் இல்லத்தில் சிபிஐ சோதனைகள் மேற்கொண்டன.
இது தொடர்பாக டெல்லியில் 7 இடங்கள் உட்பட மும்பை, பாட்னாவிலும் சில இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.