உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் உள்ள லிஃப்ட்டில் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் சிக்கிக் கொண்டனர்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு சென்றிருந்த அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவியும் கண்ணூஜ் தொகுதி எம்.பி.யுமான டிம்பிள் யாதவுடன் பேரவை நிகழ்வு முடிந்தவுடன் வெளியே செல்வதற்காக லிஃப்ட்டில் சென்றனர். அப்போது பாதியிலேயே லிஃப்ட் நின்றது.
அரைமணி நேரத்துக்கும் மேலாக இருவரும் சிக்கி தவித்ததால் இந்தச் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் லிஃப்ட்டின் கதவை அதிகாரிகள் உடைத்து அகிலேஷ் மற்றும் பிம்பிலை மீட்டனர்.
டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டிருந்த அகிலேஷ், "விதான் சபை லிஃப்ட்டுக்குள் மாட்டிக்கொண்டேன். இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன். கடவுளுக்கும் எனக்காக நல்லதையே நினைக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
லிஃப்ட் நின்றது குறித்து விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். பராமரிப்பு நடவடிக்கைகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.