கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசு கேரளாவுக்கு இதுவரை 73.38 லட்சம் டோஸ் கரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைத்துள்ளது. வீணாவதை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட டோஸ்களைவிட ஒவ்வொரு குப்பியிலும் கூடுதல் மருந்து இருக்கும். ஆனால், இந்த கூடுதல் மருந்தையும் நாங்கள் பயன்படுத்தி உள்ளோம். இதனால் 74.26 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை மேற்கோள் காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “கேரள சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தடுப்பு மருந்து வீணாவதைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் மற்றமாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் அவர்களுக்கு பாராட்டுகள். கரோனாவுக்கு எதிரான போரை வலுப்படுத்த, மருந்து வீணாவதைக் குறைக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.