‘ஊழல் அதிகாரிகளின் சொத்து களை பறிமுதல் செய்ததில் தவ றில்லை, இதற்காக பிஹார் மற்றும் ஒடிஸா மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்ததில் தவறில்லை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
ஊழல் அதிகாரிகளின் சொத்து களை கைப்பற்ற சிறப்புச் சட்டம் கொண்டு வந்து அதன்படி அவர் களது சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை பிஹார் மற்றும் ஒடிஸா மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பாதிக் கப்பட்ட ஊழல் அதிகாரிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவில், ‘ஊழல் வழக்கு விசாரணையின்போது, சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள் ளதோ அந்த நடைமுறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர் களைப்போல் எங்களையும் சமமாக நடத்த வேண்டும். உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகளை ‘தனிப்பிரிவு’ என்று பிரித்து சொத்துகளை பறிமுதல் செய்யக் கூடாது. இது சட்டத்துக்கு எதிரானது’ என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஊழலை தடுக்க மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் கொண்டு வந்ததில் தவறில்லை. ஊழல் பணத்தில் அதிகாரிகள் சேர்த்த பணம், வீடு ஆகியவற்றை தண்டனை கிடைக்கும் முன்பே பறிமுதல் செய்ய போலீஸாருக்கு அதிகாரம் அளித்ததிலும் எந்த தவறும் இல்லை. ஒருவகையில் ஊழல் என்பது நாட்டின் பொருளா தார தீவிரவாதம் போல் வளர்ந்து விட்டது. இந்த சமூக சீரழிவை தடுக்க கடும் விதிகளுடன் கூடிய சிறப்பு சட்டமும் சிறப்பு அணுகுமுறையும் தேவைப்படுகிறது.
ஒடிஸா மாநில அரசு நிறை வேற்றியுள்ள சட்டத்தில், ‘மக்களுக்கு பணியாற்றும் முக்கிய துறைகளில் முக்கிய பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்து சொத்து சேர்க்கின்றனர். எனவே, அவர்களை சிறப்பு பிரிவினராக கருதி, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வது அவசியம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. ஊழல் செய்து சொத்து சேர்ப்பது, நேர்மையாக பணியாற்றுவோரின் உழைப்பை வீணடிக்கிறது. இதனால், நேர்மையாக உழைப் பவர்கள் எவ்வளவு துன்பத்தை சந்திக்கின்றனர் என்பதும் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பில் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல்வாதிகளாக இருக்கக் கூடாது. ஜாதி, இன, சமூக பாரபட்சமின்றி, நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஊழல் என்பது நோய். அது நாட்டின் முன்னேற்றத்தை முடக்கி சமூக அவலத்துக்கு வழிவகுக்க கூடியது. எனவே, அப்படி ஊழல் செய்து சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ததில் தவறில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.