மாதேஸிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதால் இந்திய, நேபாள எல்லையில் சரக்கு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
நேபாளத்தில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் அமல் படுத்தப்பட்டது. இது தங்களுக்கு விரோதமாக இருப்பதாக மாதேஸி கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 4 மாதங்களாக இந்திய, நேபாள எல்லையில் சரக்கு போக்குவரத்தை அவர்கள் முடக்கினர்.
இதனால் நேபாளத்தில் மருந்து பொருட்கள், பெட்ரோலிய பொருட் களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற் பட்டது. ஏற்கெனவே நிலநடுக் கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளம் மாதேஸிகளின் போராட்டத்தால் பெரும் பொருளாதார பின்ன டைவைச் சந்தித்தது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் சுஷில் குமார் கொய்ராலா தலைமையிலான குழுவுக்கும் மாதேஸி தலைவர் களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன்படி அரசியல் சாசனத்தில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ள அந்த நாட்டு அமைச்சரவை நேற்றுமுன் தினம் இரவு ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து மாதேஸிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள் ளனர். நேற்றிரவு முதல் நேபாள எல்லைப் பகுதிகளில் சரக்குப் போக்குவரத்து தொடங்கி யுள்ளது.