இந்தியா

மக்களவைத் தலைவராக பாஜக எம்.பி. சுமித்ரா மகாஜன் தேர்வாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

மக்களவைத் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுமித்ரா மகாஜன் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆட்சியின் 15-வது மக்களவையில் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டவர் ஜெகஜீவன் ராமின் மகளும் காங்கிரஸின் எம்.பி.யுமான மீராகுமார். முதல் பெண் மக்களவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற மீரா குமாரைத் தொடர்ந்து, இப்போ தைய 16-வது மக்களவையிலும் பெண் ஒருவரே தலைவராக தேர்ந் தெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: ‘மத்தியப் பிரதேச மாநிலத்தி லிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள சுமித்ராவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அப்பதவி கிடைக்க வில்லை. இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பரிந்துரையின் பேரில் சுமித்ராவுக்கு மக்களவைத் தலைவராக தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பான இறுதி முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில்தான் எடுக்கப்படும்” என்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் இந் தோரில் பிறந்து வளர்ந்தவரான சுமித்ரா மகாஜன் (71), அதே தொகுதியில் 1989 முதல் தொடர்ந்து எட்டாவது முறையாக மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற்றுள் ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சர வையில் 1999 முதல் 2004 வரை மத்திய இணை அமைச்சராக சுமித்ரா பதவி வகித்துள்ளார்.

SCROLL FOR NEXT