இந்தியா

ஆக்சிஜனை நேரடியாக வழங்க மஹிந்திரா நிறுவனம் ஏற்பாடு

செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிராணவாயுவை (ஆக்சிஜன்) நேரடியாக சப்ளைசெய்ய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்நிறுவனம் ``ஆக்சிஜன் ஆன் வீல்ஸ்'' எனும் திட்டத்தை கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கியுள்ளது.

நாட்டிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் மாநிலங்களில் முதலாவதாக மகாராஷ்டிர மாநிலம் உள்ளது. இதற்குத் தீர்வுகாணும் விதமாக ஆக்சிஜனைஉற்பத்தி ஆலைகளிலிருந்து பெற்று அதை மருத்துவமனைகளுக்கு வாகனம் மூலம் சப்ளைசெய்ய மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்ஆலைகளிலிருந்து மருத்துமனை களுக்கு ஆக்சிஜனை எடுத்து வரும் பணியை இந்நிறுவனவாகனங்கள் மேற்கொள்ளும்என நிறுவனத் தலைவர் ஆனந்த்மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வாகனங்களின் போக்குவரத்து விவரங்களை தனது ட்விட்டர் பதவிலும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கென நிறுவனம் பிரத்யேகமாக கண்ட்ரோல் மையங்களை உருவாக்கியுள்ளது. எங்கெங்கு வாகனங்களுக்கான ஆக்சிஜனை நிரப்பும் வசதி உள்ளது என்ற விவரங்களையும் இந்த கண்ட் ரோல் மையம் தெரிவிக்கும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதைக்கு 13 மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம் மருத்துவமனைக ளுக்குத் தேவையான வசதிகளை அளிக்க 61 பெரிய சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பி வழங்க மஹிந்திரா நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்த மருத்துவமனைகள் நாசிக், மும்பை, தானே, நாகபுரி ஆகிய பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய பொலேரோ வாகனங்களை செயல்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் 20 பொலேரோ வாகனங்களில் ஆக்சிஜனை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

SCROLL FOR NEXT