இந்தியா

டெல்லிக்கு 30.86 டன் ஆக்சிஜன் ரயிலில் அனுப்பியது ஒடிசா

செய்திப்பிரிவு

டெல்லியில் கரோனா நோயாளி களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய மாநிலங்களுக்கு இடையே மருத்துவ ஆக்சிஜன் கொண்டு செல்ல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பதிவில், “ஒடிசாவின் அங்குல் பகுதியில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு வருகிறது. இதில் 30.86 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

ஆக்சிஜன் தொழிற் சாலைகளில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்வதன் மூலம் கரோனா வைரஸுக்கு எதிரான நமது ஒருங்கிணைந்த போரில் ரயில்வே முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட் டிருந்தார். இந்த எக்ஸ்பிரஸ் நேற்று மாலை டெல்லி வந்தது.

மற்றொரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கத்தின் துர்காபூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுள்ளது. இதில் 6 டேங்கர்களில் 120 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. இந்த ரயில் இன்று (மே 4) டெல்லி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லிக்கு முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் கடந்த 27-ம் தேதி வந்தது. இதில் சத்தீஸ்கரின் ராய்கரில் உள்ள ஜிண்டால் ஸ்டீல் ஆலையில் இருந்து 64.55 டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டது.

ரயில்வே இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 76 டேங்கர்களில் 1,125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்துள்ளது.

SCROLL FOR NEXT