திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி | கோப்புப் படம். 
இந்தியா

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்: மேற்கு வங்க ஆளுநருடன் இன்று மாலை மம்தா பானர்ஜி சந்திப்பு

பிடிஐ

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 212 இடங்களைக் கைப்பற்றி பிரமாண்ட வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்எல்ஏக்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 212 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது.

தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. மாநிலத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் முதல்வர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.

இன்று மாலை 7 மணிக்கு ஆளுநர் தனகரை அவரின் மாளிகையில் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். அப்போது மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது

இது தொடர்பாக ஆளுநர் தனகர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என்னைச் சந்திக்க உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT