இந்தியா

அசாமின் அடுத்த முதல்வர் யார்?

செய்திப்பிரிவு

அசாமில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த முதல்வராக பதவியேற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கும், அமைச்சர் ஹிமந்த் விஸ்வ சர்மாவுக்கும் இடையே முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

அசாமில் பெரும் செல்வாக்கு பெற்றவரான ஹிமந்த் விஸ்வ சர்மா, காங்கிரஸில் இருந்து விலகி 2015-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர் ஆவார். ஹிமந்த் விஸ்வ சர்மாவை தொடர்ந்து காங்கிரஸில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பலரும் பாஜகவில் 2016-ம் ஆண்டு இணைந்தனர். அதே ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்காக தீவிரமாக உழைத்தார் ஹிமந்த் சர்மா. மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றால் ஹிமந்த் சர்மா தான் அடுத்த முதல்வர் என்ற பேச்சுகளும் கட்சிக்குள் அடிபட்டன. ஆனால், பாஜக தலைமையோ சர்பானந்த சோனாவலுக்கு முதல்வர் பதவியை வழங்கியது.

இந்நிலையில், தற்போதைய பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால், ஹிமந்த் சர்மாவுக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

SCROLL FOR NEXT