இந்தியா

வகுப்புவாத மதவெறியை நல்ல ஆட்சி வென்றிருக்கிறது: பினராயி விஜயனுக்கு பிரகாஷ்ராஜ் வாழ்த்து

செய்திப்பிரிவு

வகுப்புவாத மதவெறியை நல்ல ஆட்சி வென்றிருக்கிறது என்று பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எப் கூட்டணி 99 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ஒரு தொகுதியில் கூட பாஜகவினர் முன்னிலை பெறவில்லை. இதனால் பாஜக கட்சியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கேரளாவின் தேர்தல் முடிவைப் பலரும் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது பினராயி விஜயனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கேரளா, கடவுளின் சொந்த நாடு. சாத்தானை வெளியே துரத்தியிருக்கிறது. வாழ்த்துகள் பினராயி விஜயன். வகுப்புவாத மதவெறியை நல்ல ஆட்சி வென்றிருக்கிறது. பெரிய நன்றி. என் அன்பார்ந்த கேரளமே. நீங்கள் இருக்கும் நிலை எனக்குப் பிடித்திருக்கிறது."

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT