தேர்தல் முடிவுகளை அறிவதற்காக காத்திருக்கும் முதல்வர் பினராயி விஜயன் | படம் உதவி சிறப்பு ஏற்பாடு 
இந்தியா

கேரளாவில் 3 சுற்றுகளில் இடதுசாரி கூட்டணி 90 இடங்களில் முன்னிலை: சுரேஷ் கோபி திடீர் முன்னேற்றம்: திருச்சூர் மாவட்டத்தைக் கைப்பற்றும் எல்டிஎப்

செய்திப்பிரிவு


கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 3 சுற்றுகள் முடிவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 90 இடங்களுடன் முன்னிலையில் உள்ளது.

ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில் 90 இடங்களுடன் முன்னிலையில்இடதுசாரிக் கூட்டணி செல்கிறது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 இடங்களுடன் பின்தங்குகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று காலை நிலவரப்படி திருச்சூர் தொகுதியில் போட்டியி்ட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி பின்தங்கிய நிலையில் தற்போது 3,752 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். பாலக்காடு தொகுதியில் போட்டியி்ட்ட பாஜக வேட்பாளர் மெட்ரோமென் ஸ்ரீதரன் 1500 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நீமம் தொகுதியையும் தக்கவைக்கிறது, கும்மணம் ராஜசேகர் நீமம் தொகுதியில் 1763 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன் மஞ்சேஸ்வரம் தொகுதியில் 1,300 வாக்குகள் வித்தி்யாசத்தில் பின்னடவைச் சந்தித்துள்ளார். பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட பாஜகவேட்பாளர் இ.ஸ்ரீதரன் 6 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

பாலா தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியி்ட்ட மாணி சி கப்பன் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். கேரள காங்கிரஸ்(மாணி) வேட்பாளர் ஜோஸ் கே மாணி பின்தங்கியுள்ளார்.

இது தவிர தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன், புதுப்பள்ளி தொகுதியில் போட்டியி்ட்ட முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா, அமைச்சர்கள் கே.கே.சைலஜா, எம்.எம்.மாணி, எம்.சி. மொய்தீன் ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் இடதுசாரிகள் முன்னிலையில் உள்ளனர். சேலக்கரா, குண்ணம்குளம், குருவாயூர்,மணலூர்,வடக்கன் சேரி, ஒள்ளூர், நட்டிகா, கைப்பமங்கலம், இரிஞ்சகுடா, புதுக்காடு, சாலக்குடி, கொடுங்கலூர் ஆகிய தொகுதிகளில் இடதுசாரிகள் முன்னிலையில் உள்ளனர். திருச்சூர் தொகுதியில் மட்டும் சுரேஷ் கோபி முன்னிலையில் உள்ளார்.

SCROLL FOR NEXT