மேற்கு வங்கத்தில் 2 சுற்று வாக்குகள் முடிவில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தாலும் அது தொடக்கநிலைதான் தேர்தல் முடிவல்ல என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா தெரிவித்தார்.
மே.வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் ேதர்தல் நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 176 இடங்களி்ல் முன்னிலை பெற்றுள்ளது, பாஜக 87 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆனால், நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை எதிர்த்துப் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைந்துள்ளார்.
இந்நிலையில் முதல் இரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக பின்தங்குவது குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியாவிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ தொடக்கத்தில் வரும் 2 சுற்று முடிவுகளை வைத்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது. இது தேர்தல் இறுதி முடிவுகள் அல்ல. தபால் வாக்குகள் எல்லாம் இறுதி வாக்குகளாகக் கருத முடியாது. இன்று மாலைக்குள் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெறுவோம்.
மே.வங்கத்தில் நிச்சயமாக பாஜகதான் ஆட்சி அமைக்கும்.கடந்த தேர்தலில் 3 இடங்களைப் பிடித்த பாஜக இந்ததேர்தலி்ல் ஆட்சி அமைக்கும். திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் தபால்வாக்குகளை அபகரித்துள்ளார்கள், ஆனால், பாஜகவுக்கு கிைடக்கவி்ல்லை “எனத் தெரிவித்தார்.