இந்தியா

வறியவர்களுக்கு சட்டத்தின் மூலம் உதவியவர் சோலி சொராப்ஜி: பிரதமர் மோடி இரங்கல்

செய்திப்பிரிவு

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான சோலி சொராப்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி. மூத்த வழக்கறிஞரான இவருக்கு வயது வயது 91. வயதான நிலையில் அவர் வீட்டில் ஓய்வாக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சோலி சொராப்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘சோலி சொராப்ஜி மிகச் சிறந்த வழக்கறிஞரும், அறிஞருமாவார். வறியவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சட்டத்தின் மூலம் உதவுவதில் முன்னணியில் இருந்தார்.

இந்தியாவின் அட்டார்னி ஜெனரலாக அவர் ஆற்றிய அரும்பணிக்கு என்றும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT