ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உலக பிரசித்தி பெற்றது ஆகும். வழக்கமாக ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை இந்த கும்பமேளா நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக 4 மாதம் நடைபெறும் கும்பமேளாவை ஒரு மாதமாக உத்தரகாண்ட் அரசு குறைத்தது. அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி இந்த கும்பமேளா தொடங்கியது. :
இதனிடையே, அதிகப்படியான பக்தர்களின் வருகை காரணமாக ஹரித்துவாரில் கரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியது. இதையடுத்து, கும்பமேளா நிகழ்ச்சிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்து வந்தன. இந்நிலையில், மகா கும்பமேளா ‘ஷாகி ஸ்நான்' என்ற புனித நீராடலுடன் இன்று நிறைவடைகிறது. கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரையில் நடந்த இந்த கும்பமேளா நிகழ்வுகளில் சுமார் 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.