இந்தியா

55 சதவீத ஊழியர்களின் தினசரி சம்பளம் 134-க்கும் குறைவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

இந்தியாவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெகு குறைவான சம்பளம் பெற்று வருவதாக ஐநாவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பணியாற்றி வரும் ஊழியர்களின் சம்பளம், வாழ்க்கை நிலை, எதிர்பார்ப்பு ஆகியவை குறித்து ஐநாவின் மனித வளர்ச்சிக் குறியீடு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (55 சதவீதம் பேர்) நாளொன்றுக்கு ரூ. 134க்கும் குறை வாகவே சம்பளம் பெறுகின்றனர். வேலைவாய்ப்பு மட்டுமே பொரு ளாதார வளர்ச்சிக்கான அளவு கோலாக அரசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய திறன்களை கற்றுக் கொடுத்து புதிய வேலைவாய்ப்பு கொள்கை களை உருவாக்கவும் முன்வர வேண்டும். 1990-களில் 35 சதவீத மாக இருந்த பெண்களின் பணித்திறன் பங்கேற்பு 2013-ம் காலக்கட்டத்தில் 27 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதையும் இந்திய அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கல்வி கிடைப்பதிலும் சமநிலை இல்லாத சூழல் நிலவுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. கல்வி துறையில் அரசின் முதலீடு சொற்ப அளவில் இருப்பதே இதற்கு முழு காரணம் என்று மூத்த கல்வியாளரான மது பிரசாத் தெரிவிக்கிறார்.

SCROLL FOR NEXT