மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறும் என 4 கருத்துக் கணிப்பு கூறியுள்ள நிலையில் ஒரு கணிப்பு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று இறுதிகட்ட தேர்தல் 35 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு கருத்துக் கணிப்புகளில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளன. ஒரு கருத்துக் கணிப்பு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
மேற்குவங்கத் தேர்தல் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
திரிணமூல் பாஜக சிபிஎம்
டைம்ஸ் நவ்: 158 115 19
ரிபப்ளிக் 133 143 16
பி மார்க் 158 120 14
இடிஜி 169 110 13
போல் ஆப் போல் 155 122 15