கோப்புப் படம் 
இந்தியா

டெல்லியில் அதிகரிக்கும் கரோனா; ராணுவம் சார்பில் கன்டோன்மென்ட் பகுதியில்  சிறப்பு கோவிட் மருத்துவமனை

செய்திப்பிரிவு

டெல்லியில் கரோனா அதிகரித்து வரும் நிலையில் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவம் சார்பில் சிறப்பு கோவிட் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு விரிவான மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்திய ராணுவம் போர்க்கால அடிப்படையில் ஏராளமான கோவிட்- 19 சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருகின்றது.

அது போன்ற ஒரு வசதி, டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பேஸ் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த முழு மருத்துவமனையுமே, அனைத்து நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சைகளை வழங்கக்கூடிய விரிவான ஏற்பாடுகளுடன் கோவிட் மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

துவக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட 340 கோவிட் படுக்கைகளில் 250 படுக்கைகள் பிராணவாயு வசதியுடன் கூடியவை. இந்த மொத்த எண்ணிக்கையை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் மொத்த படுக்கைகளில் எண்ணிக்கையை 650-ஆக உயர்த்தவும், அவற்றுள் 450 படுக்கைகளை பிராணவாயு வசதியுடன் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றொரு முன்முயற்சியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அனைத்து நாட்களும் 24 மணி நேரமும், மூத்த அதிகாரி மேற்பார்வையில் வழங்கும் தொலை ஆலோசனை மற்றும் தகவல் மேலாண்மை பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக 1200-1300 அழைப்புகள் இந்த பிரிவிற்கு வருகின்றன.

SCROLL FOR NEXT