பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு மூடப்பட்டுள்ளது. அது வரும் ஜனவரியிலிருந்து உற்பத்தியைத் தொடங்கும். 2-வது அலகு ஆண்டின் மத்தியிலிருந்து செயல்படத் தொடங்கும். உற்பத்தி தொடங்கிவிட்டால் தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் பல மடங்கு உயர்ந்து விடும். அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு உற்பத்தி அதிகரிக்கும்.
இந்த இரு அலகுகளும் செயல்படத் தொடங்குவதில் பிரதமர் மோடி அக்கறை காட்டி வருகிறார். கேரளத்துக்கு கூடுதல் மின்சாரம் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதிலளித் தால் அது இரு மாநிலங்களுக்கும் தொல்லை ஏற்படுத்தும். தற் போதைய விதிமுறைப்படி, தமிழ கத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 35 சதவீதம் அண்டை மாநிலங்களுக்கு அளிக்கப் படும். 50 சதவீதத்தை தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும். எஞ்சிய 15 சதவீதம் மத்திய அரசின் தொகுப்புக்கு அளிக்கப்படும். மின்சார பகிர்ந்தளிப்பை அணுசக்தி துறை மேற்கொள்வதில்லை. அது மின் துறையின் கீழ் வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.